தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன உள்துறை செயலர் விளக்கம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 13– தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு உள்துறை செயலர், பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக” தெரி வித்துள்ளனர்.

குற்ற சம்பவம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்ட தாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் திமுக அரசு சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு அளிப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் தொடர்ந்து பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்டு வந்தன.

இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தாலும் கூட சில நேரங்களில் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு உள்துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் குற்றசம்பவங்கள் குறித்து நேற்று (12.3.2026) தமிழ்நாடு உள் துறை செயலர் தீரஜ்குமார் மற்றும் தமிழ்நாடு பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநர்  வெங்கட்ராமன், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் விளக்கம் அளித்து பேசினர். அப் போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாவே உண் மைக்கு புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. உண்மைக்கு மாறான தோற்றங்கள் காண்பிக்கப்படுகின்றன

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் குற்ற சம்பவங்கள் குறைந் துள்ளன. கோயில் விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படுகின்றன.

வழக்குகள் அதிகம் பதிவாகு வதால் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக கருத முடியாது. சிவகங்கை காவல் மரணம் தொடர்பாக சிபிசிஅய்டி விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் மரணங்களை சகித்து கொள்ள முடியாது. கடந்த 2021 ஆம் ஆண்டு 422 பாலியல் வன்கொடுமை வழக் குகள் பதிவானது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டு 401 என குறைந்து இருக்கிறது.

குற்றங்கள் எதுவாயினும் உடனே பொதுமக்கள் புகார் கொடுக்க வேண்டும். தற்போது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மக்கள் தாமாக முன் வந்து துணிச்சலோடு புகார் தருகிறார்கள். விசாரணையை எப்படி நடத்துவது என காவல் நிலையங்களுக்கு வழிகாட்டு நெரிமுறைகள் வெளியிடப்படும்” என்று கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *