சுகாதாரம் மற்றும் கால்நடைத் துறைகளில் தேர்வான 542 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 13– சுகாதாரம், கால்நடைத் துறைகளில் தேர்வு செய்யப் பட்ட 542 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியத்தின் மூலமாக மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையில் 182 சிறப்பு மருத்துவர்களும், கதிரியக்கவியல் துறையில் 37 சிறப்பு மருத்துவர்களும், தடயவியல் மருத்துவத் துறையில் 24 சிறப்பு மருத்துவர்களும், முதியோர் மருத்துவத் துறையில் 6 சிறப்பு மருத்துவர்களும், இருதய அறுவை சிகிச்சை துறையில் ஒரு சிறப்பு மருத்துவர் என, மொத்தம் 250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேற்று (12.3.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதேபோல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக கால்நடை பராமரிப்புத் துறையில், கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 292 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குற்ற வழக்குத் தொடர்புத் துறையில் அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 45 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம், ‘புனித’ தோமையார் மலையில் ரூ.35.45 கோடி மதிப்பில் 59,600 சதுர அடிபரப்பில் தரை மற்றும் 3 மேல்தளங்களுடன் கட்டப்படவுள்ள முன்னாள் படைவீரர் விடுதி மற்றும் பயிற்சி மய்யத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, செய்தித்துறையின் ‘தமிழரசு‘ சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் “மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள் (2021-2026)” சாதனை மலரையும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *