டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஓபிசி கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், இது அந்த மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிரீமிலேயர் நிர்ணயத்தின்போது ஊதிய வருமானத்தையும் தொழில் அல்லது சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க கேட்டு 193 எம்பிக்கள் கையெழுத்து: விதிகளின்படி தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்குவதற்கான நோட்டீசில் குறைந்தது 100 எம்பிக்கள் கையெழுத்திட வேண்டும். மாநிலங்களவையில் 50 உறுப்பினர்களின் கையெழுத்து தேவை. இந்த மனுவில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர். மக்களவையில் 130 உறுப்பினரும், 63 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘மாநிலங்கள் மீது சுமை’: புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாநிலங்கள் மீது சுமையை சுமத்துவதன் மூலம், அத்திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நீங்கள் விரும்புகிறீர்கள் என காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி கண்டனம்.
தி இந்து:
* உ.பி.யில் 27000 பள்ளிகள் மூடல்? உத்தரப் பிரதேசத்தில் அரசின் தொடக்கக் கல்வி கட்டமைப்பு “கிட்டத்தட்டச் சிதைக்கப்பட்டுவிட்டது”. அனுமதிக் கப்பட்ட 4.18 லட்சம் ஆசிரியர் பணியிடங்களில், 85,000 இடங்கள் காலியாகவே உள்ளன; 2,586 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கி வருவதாகவும், சுமார் 27,000 பள்ளிகள் மூடப்பட்டோ அல்லது பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டோ உள்ளதாகவும் கண்டனம்.
* தகவல் அறியும் உரிமையை தடுப்பதற்கு தரவு தனியுரிமை விதிமுறைகளை பயன்படுத்துவதாகக் கூறப்படும், இந்தியாவின் புதிய டிஜிட்டல் தனிப்பட்ட தரவு சட்டத்தின் கீழ், “தனிப்பட்ட தரவு” (PERSONAL DATA) எதைக் குறிக்கிறது என்பதை ஆராய உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.
* கேரளாவில் எஸ்.என்.டி.பி. யோகம் அமைப்பின் நிர்வாகிகள் பதவிக்கு உயர்நீதிமன்றம் தடை: யோகத்தின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குத் தாக்கல் செய்யத் தவறியதன் மூலம், நிறுவனங்கள் சட்டத்தை மீறி அவர்கள் செயல்பட்டுள்ளனர் என்ற கண்டுபிடிப்பை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
< பெண்கள் ஒதுக்கீடு சட்டம் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கோரப்பட்டது: அரசியலமைப்பு (நூற்றியாறாவது திருத்தம்) சட்டம் அல்லது நாரி சக்தி வந்தன் ஆதினியம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை முன்னெடுப்பதற்கான திருத்தத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசியல் கட்சிகளைத் தனித்தனியாகக் கலந்தாலோசிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
< ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் பெற்றோரின் வருமானத்தை வைத்து தீர்மானிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
– குடந்தை கருணா
