பெண்ணுரிமை மீட்ட – காத்த தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் மகளிர் நாள் கருத்தரங்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராணிப்பேட்டை, மார்ச் 13- 8.3.2026 அன்று மாலை 5 மணி தொடங்கி இரவு 8.45 வரை உலக மகளிர் நாளை முன்னிட்டு, பெண்ணுரிமை மீட்ட – காத்த தந்தை பெரியார், அம்பேத்கர் எனும் தலைப்பில் ராணிப் பேட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

புளியங்கண்ணு கிராமத்தில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் புவனேஸ்வரிதேவராஜ் தலைமையில் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் சுசிலா வெங்கடேசன் முன் னிலையில் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட து.தலைவர் பொன்.வெங்கடேசன் தொடக்க உரையாற்றி நிகழ்வை ஒருங்கினைத்தார் தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன் நோக்க உரையாற்றினார் மாவட்ட தலைவர் சு.லோகநாதன்.

தொடர்ந்து மாவட்ட ப.க.செயலாளர் ந.இராமு மகளிர் நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் சொ.ஜீவன்தாஸ், தி.க. சின்னதுரை, தமிழ்கனல், தியாகு, சிப்காட் ராஜாசார், க.சு.பெரியார்நேசன் ஆகியோரின் உரைக்குப் பிறகு மாநில மாணவர் கழக துணை செயலாளர் தேவ.நர்மதா சிறப்பாக உரையாற்றினார்.

இறுதியாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சு.தேவராஜ் நன்றி கூறியதோடு அனைவருக்கும் சிறப்பான இரவு உணவு அளித்தார்.மக்கள் பெருவாரியாக கலந்துகொண்டு பாராட் டிச் சென்றனர். குறிப்பாக பெண்கள் ஏராளமாக கலந்துகொண்டு சிறப்பித் தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *