ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதியில் விதி மீறல்

Viduthalai
1 Min Read

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

அரசியல்

சென்னை, ஏப். 11- ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர் பாக சட்டப்பேரவையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதலமைச்சர் கொண்டுவந்த தீர் மானத்தை அவை முன்னவர் துரை முருகன் முன்மொழிந்தார். தமிழ் நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க ஒன்றிய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவை யில் தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ஒதுக்கப்பட்ட 18 கோடி ரூபாயில் 11.32 கோடி ரூபாய் ஆளுநர் மாளிகை கணக்கிற்கு மாற்றபட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை செலவு செய்த 11.32 கோடி ரூபாய்க்கான செலவு விவரங்கள் எதுவும் அர சுக்கு வழங்கப்படவில்லை. அட்சய பாத்திரம் என்ற பெயரை சொல்லி ஆளுநர் மாளிகை கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி மாணவர்கள் கூட் டத்திற்கு 5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி ராஜ்பவனில் நடந்த கலாசார நிகழ்வுக்கு 3 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

ஆளுநர் மாளிகை செலவினங் களில் விதிமீறல்கள் தடுக்கப்படும். விதிமுறைகளில் படிதான் செலவு செய்ய வேண்டும் என்று கட்டுப் பாடுகளை முதலமைச்சர் அறிவு றுத்தலின் பெயரில் உடனடியாக கொண்டு வருவேன் என்று உறு தியாக கூறுகிறேன்’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *