திருச்சி, மார்ச் 13 வேளாண்மை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி,கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, என எத்தனை அக்கிரமங் களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த மோடிதான் திருச்சியில் கபட வேடம் போடுகிறார்!
விவசாயிகளின் எதிரி மோடியையும் அவருக்குத் துணை போகும் எடப்பாடி பழனிசாமியையும் தமிழ் நாட்டு விவசாயக் குடும் பங்கள் என்றும் மன்னிக் காது என்று வேளாண்மை துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி நேற்று (12-03-2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தது குறித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்குத் தமிழ் நாடு மீது பாசம் டன் கணக்கில் கொட்டும். திருச்சி கூட்டத்தில் ஆத்தோ ஆத்து என்று உரையை ஆற்றியிருக்கிறார். வறண்ட தானியமான கேப்பையில் நெய் வடிவது சாத்தியமில்லை. கேட்கிறவன் கேனையனா இருந்தால் கேப்பையில் நெய் வடியுதுனு சொல்ற மாதிரி பொய்ப் பிரசாரங்களை முன்னெ டுப்பதில் பிரதமர் மோடியை மிஞ்சும் ஆள் இந்த உலகத்திலேயே இல்லை. விவசாயம், விவசாயிகளின் வருமா னம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட் டிற்கான திட்டங்கள் பற்றி யெல்லாம் பேசுவதற்குப் பிரதமர் மோடிக்கு அருகதை இருக்கிறதா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் முந்தைய அதிமுக ஆட்சியில் நசிந்து கிடந்த விவசாயத்தை மீட்டெடுக்க வேளாண் மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த அய்ந்தாண்டுகளாக வேளாண்மை துறைக்கென ரூ.1 இலட்சத்து 94 ஆயிரத்து 76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள் முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 1.36 சதவீதமாக இருந்த வேளாண்மை வளர்ச்சி தற்போது 5.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு வரிச் சலுகை அளித்து இந்திய விவசாயத்தை சவக்குழியில் தள்ள பிரதமர் முயலுக்கிறார். விவசாயிகளின் எதிரி மோடியையும் அவருக்கு துணைப் போகும் பழனி சாமியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
