குற்ற வழக்கு தொடர்வு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 13 குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 வழக்குரைஞர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் பெருநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை நடத்துவர். அத்துடன் அவர்கள் மாற்று பணியில் பல்வேறு அரசு துறைகளில் சட்ட ஆலோசகர்களாக பணிபுரிவர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2இல் ஏற்பட்டுள்ள காலிப்பணி யிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் மூலம் நிரப்பு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல்நிலை தேர்வு, முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றிற்கு பின் அப்பணி யிடத்திற்கு 45 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவ்வாறு தேர்வு செய்யப் பட்ட 45 நபர்களுக்கு அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமை செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., குற்ற வழக்கு தொடர்வு துறை இயக்குநர் ஜி. கிருஷ்ணராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *