எரிவாயு தட்டுப்பாடு கருநாடகாவில் 65 சதவீத உணவகங்கள் மூடப்பட்டன

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களுரு, மார்ச்.13 மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியதால், இந்தியாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, பெங்களூரு உட்பட கருநாடகத்தின் பல நகரங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில் சுமார் 65% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

பெங்களூரு உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம், “எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளது.  அடுத்த சில நாட்களில் எரிவாயு விநியோகம் சீராகாவிட்டால், தற்போது இயங்கும் உணவகங்களும் மூடப்படும் அபாயம் நிலவுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *