தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்.பி.க்கள் கையொப்பம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 13 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தில் 200 நாடாளுமன்ற உறுப்பினர் கையெழுத்திட்டுள்ளதாகத் தக வல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணை யரை நீக்கும் தீர்மானத்தை இன்று (13.2.2026) மக்களவை அல்லது மாநிலங்களவையில் எதிர்க்கட்சி யினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

விதிகளின்படி மக்களவையில் 100 நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவையில் 50 உறுப் பினர்களும் தீர்மானத்தில் கையெழுத்திட்டால் அதனை முன் மொழியலாம் என்ற நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கையெழுத் திடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தில் இந்தியா கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டதாகவும், இந்தியா கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை முன்மொழிவது இதுவே முதல்முறையாகும்.

அலுவலக விவகாரங்களில் பாரபட்சமான நடத்தை, தேர்தல் மோசடி தொடர்பான விசா ரணைகளை தடுப்பது, பெருமளவில் வாக்குரிமையை பறிப்பது போன்ற 7 காரணங்கள் அவரை நீக்குவதற்கு குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாஜகவிற்கு ஆதரவாக தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்படுவதாகவும், நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஒன்றிய  அரசிற்கு ஆதர வாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன.

இதில், மேற்கு வங்கத்தில் பல உண்மையான வாக்காளர்களை நீக்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  குற்றம் சாட்டியிருந்தார்.

சட்டப்படி தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவதற்கான வழிமுறை உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்குவதற்குச் சமமானது.

இந்தத் தீர்மானம் நாடாளு மன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்படலாம். மேலும், அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை போன்ற சிறப்பு பெரும்பான்மையால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

நீதிபதிகள் (விசாரணை) சட்டம் 1968-இன் படி, ஒரே நாளில் இரு அவைகளிலும் தீர்மானத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டால், இரு அவைகளிலும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாமல் அதற்கான குழு அமைக்கப்படாது.

தீர்மானம் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மக்களவைத் தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர்  ஆகியோர் இணைந்து ஒரு குழு அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *