இந்நாள் – அந்நாள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நமச்சிவாயனார் நினைவுநாள் இன்று (13.03.1936)

தமிழ் உலகில் பெரும் புலமைக்குச் சொந்தக் காரர் வரிசையில் கா. நமச்சிவாயனார் அவர் களுக்குப் பெருமை மிக்க இடம் உண்டு.

திராவிடர் இயக்கம் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியும், திராவிடர் திரு நாள் பொங்கல் என்றும் மக்களிடையே பரப்பி தமிழர் பண்பாட்டுத் திசை யில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தாகும்

இன்று அவருடைய  நினைவு நாள் (13.3.1936)

அந்தக் கால கட்டத் தில் (1934இல்) தமிழின் உயர்வினை கா. நமச் சிவாயனார் கீழ்க்கண்ட வாறு பாடுகிறார்.

தேனினும் இனிய நாத செந்தமிழ் மொழியே

தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

மாந்தருக் கிருகணா வயங்குதென் மொழியே

தானியல் சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே!

என்று தமிழுணர்வின் பெருமையைப் பாடினார் கா. நமச்சிவாயனார்.

அவர் குறித்துத் தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் – அந்தக் கால கட்டத்தில் தமிழின் – தமிழரின் நிலை எப்படி இருந்தது என்பதனை விளக்கவல்லதாகும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ் கிருத புரொஃபசர் வாங் கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியா சம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ் கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ் கிருத புரொஃபசருக்கு ரூ.350 சம்பளம்.

தமிழ்ப்பண்டிதருக்கு 75 ரூபாய்தான்சம்பளம் சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர்- புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் – ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு கா.நமச்சிவாய – முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்த போது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத் தான் ஞாபகம் – அதே நேரத்தில் அங்கு சமஸ் கிருத புரொஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கிய சம் பளம் சுமார் ரூ.300க்கும் மேல்; ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு பனகல் ராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்! என்றும் சொன்னார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார் – இவ்வாறு தந்தை பெரியார் எழுதினார்.

இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *