ஓ.பி.சி. பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 13 உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று ஓ.பி.சி. பிரிவினருக்கு இழைக்கப்பட்டு வருகிற அநீதிக்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலைதளப் பதிவு வருமாறு:–

தீர்ப்பை வரவேற்கிறேன்!

ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி!

ஓபிசி கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.

இத்தீர்ப்பானது, கிரீமிலேயர் நிர்ண யத்தின்போது ஊதிய வருமானத்தையும் தொழில் அல்லது சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளது.

ஓபிசி மக்களின் நியாயமான உரிமை கள் கிடைக்காமல் போவதில் இருந்து பாது காக்கிறது.

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான தகுதி வரையறை தொடர்பான உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உறுதிசெய்துள்ளது.

பல்வேறு துறைகளின் வேலை வாய்ப்பு களில் ஓபிசி மக்களுக்கு எதிராக இருந்த பாகுபாட்டை நிராகரித்திருக்கிறது.

இட ஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது எனும் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியி ருக்கிறது.

எனினும், இந்த வழக்கில் உண்மை யாகவே பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினர் பலரின் நியாயமான உரிமையை மறுக்கும் நிலைப்பாட்டை என்.டி.ஏ. அரசு எடுத்து வாதாடியது. அதுமட்டுமில்லாமல், முன்னேறிய வகுப்பினருக்கான பொருளாதார ரீதியான EWS இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்த வரையறையை மீறியது.

பணியிடங்கள் நிரப்பப்படவில்லை!

மண்டல் குழு அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து முப்பது ஆண்டு களாகியும், நாட்டின் பல முன்னணி உயர் கல்வி நிறுவனங்களிலும் ஒன்றிய அரசுப் பணிகளிலும் பல ஓபிசி பணியிடங்கள் இன்றும் நிரப்பப்ப டாமலே உள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்தியத் தொகுப்பில் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது உள்ளிட்ட பலவற்றிலும் தி.மு.கழகம் சமூகநீதிக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. சமூகநீதிக்கான நம் போராட்டம் தொடரும்!

ஏற்கெனவே குடிமைப் பணித் தேர்வுக ளில் தேர்ச்சி பெற்றும் தங்களுக்கான இடங்கள் மறுக்கப்பட்ட ஓபிசி தேர்வாளர்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, அரசியலமைப்பின் சமத்துவ நெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *