சென்னை, ஏப்.11- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட் டுள்ள 2,828 குடியிருப்புகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து அரசு நேற்று (10.4.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், சென்னை என்.வி.என். நகர் திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத் தின் கீழ் தூண் மற்றும் 14 அடுக்குகளுடன் ரூ.104.10 கோடி செலவில் 840 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, தேனி அப்பியபட்டியில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள், போடிநாயக்கனூரில் 168, திருச்சி மாவட்டம் இருங்களூரில் 240, தஞ்சாவூர் மாவட்டம் கூடநாணல் பகுதி யில் 240, ஈரோடு மாவட்டம் அரக்கன் கோட்டையில் 180, உக்கடம் பகுதியில் 224, வேலூர் மாவட்டம் தொரப் பாடியில் 160, ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதி யில் 264 குடியிருப்புகள் மற்றும் கோவை மாவட்டம் பச்சினம்பதியில் தனி வீடுகளாக 80 குடியிருப்புகள் என மொத்தம் ரூ.284.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்பு களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 330 பயனாளிகளுக்கு குடியிருப் புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளி களுக்கும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் 5,430 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலாரூ.2.10 லட்சம் வீதம் ரூ.114கோடியே 3 லட்சம் மதிப்பீட்டி லான பணி ஆணைகளை வழங்கிடும் அடையா ளமாக 2 பயனாளிகளுக்கும் முதல மைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலை மைச் செயலர் வெ.இறையன்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ம.கோவிந்த ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வீட்டு வசதி வாரியம்:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.171.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங் களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ரூ.10.88 கோடியில் கட்டப்பட்ட அலு வலக கட்டடங்கள், தமிழ்நாடு கூட் டுறவு வீட்டுவசதி இணையத்தின் சார்பில் ரூ.1.35 கோடியில் புதுப்பிக்கப் பட்ட கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
நகர் ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடங் களுக்கு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கு பணிநியமன ஆணைகளை யும் முதலமைச்சர் வழங்கினார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், வண்டலூர் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகில் தொல்பொருள் விளக்க மய்யம் மற்றும் கால நிலை பூங்கா 16.90 ஏக்கரில் ரூ.14.98 கோடியில் அமைக்கப் பட உள்ளது.
சாத்தாங்காட்டில் இரும்பு மற்றும் எஃகு வணிக அங்காடியில் 4 ஏக்கரில் கனரக வாகனநிறுத்துமிடத்தில் ரூ.5 கோடியில் கான்கிரீட் சாலை அமைக் கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், வாரிய மேலாண் இயக்குநர் சரவண வேல்ராஜ், நகர ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன், கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர் அ.த.பாஸ்கரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.