கடந்த அய்ந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பெருமிதம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.12 திமுக ஆட்சியில், இந்தியாவின் விளை யாட்டுத் தலைநகராகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தவும், சிதறிக்கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டவும், அவர்களை மனஉறுதி படைத்தவர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்குத் தமிழ்நாடு அரசு ஊக்கமளித்து வருகிறது.

திமுக அரசு சார்பில், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட், சென்னை ஃபார்முலா-4 கார் பந்தயம், பன் னாட்டு மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, உலக ளவில் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் தமிழ்நாடு முக்கியமான விளையாட்டுத் தளமாக மதிக்கப் படுகிறது.

ஊக்கத் தொகைகள்

விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்கும் வீரர் களுக்குப் பயிற்சிகள் பெற உதவித்தொகை, தங்கும் இடவசதி, போட்டிகளில் பங்கேற்க வெளியூர் களுக்கும் வெளிநாடு களுக்கும் சென்று வரும் பயணச் செலவு, வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பரிசுகள், ஊக்கத்தொகைகள் அனைத்தும் போட்டிகளுக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. சிறந்த வெற்றிகளை ஈட்டித் தமிழ்நாட்டிற் கும், ஒன்றிய அரசுக்கும் புகழ் தேடித்தரும் வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உயர் ஊதியத்துடன் பணி நியமனம் வழங்கப்படுகிறது. மூன்று சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 301 விளையாட்டு வீரர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட 6,689 வீரர் வீராங் கனைகளுக்கு ரூ. 215.78 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

உலகத் தரத்திலான…

சென்னை செம்மஞ்சேரியில் ரூ. 261 கோடியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை 141 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு’ வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம், ‘இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு’ என இன்று பெற்றுள்ள புகழ், நாளை ‘உலகின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு’ என்னும் பெருமையையும் புகழையும் ஈட்டும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *