கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.3.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* இந்திய வரலாற்றில் முதன்முறையாக தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்து; இந்தியா கூட்டணி தலைவர்கள் மனுவை இந்த வாரம் நாடாளுமன்ற இரு அவை தலைவர்களிடமும் தர முடிவு.

* நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கானது மட்டுமல்ல, மாறாக, அது முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது”, கடைசியாக நான் பேசியபோது நான் நரவனே புத்தகம் குறித்த பிரச்சினை எழுப்பினேன். எப்ஸ்டீன் கோப்புகள் பற்றி பிரச்சனை எழுப்பினேன். அதானி பிரச்சனையை எழுப்பினேன். இந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்திய மக்களுக்கு அடிப்படை. இந்த விவகாரங்களில் நமது பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மத்திய ஆயுதக் காவல் படை துறையில் 93000 பணியிடங்கள் காலியாக உள்ளது, நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்.

தி இந்து:

*மேற்கு ஆசியாவில் மோதலின் வளர்ந்து வரும் பொருளாதார தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்;  என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் கோரிக்கை.மேலும் இந்தியாவின் எரிசக்தி தயார் நிலை குறித்த “போலி மூல அடிப்படையிலான உத்தரவாதங்கள்” மூலம் ஒன்றிய அரசு தனது “முழுமையான திறமையின்மையை” மறைப்பதாக குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *