ஒன்றிய அரசு முடிவால் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கம் அமைச்சர் அய். பெரியசாமி விளக்கம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 12 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு ‘ஜி ராம் ஜி’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. கிராமங்களை மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளும் புதிய திட்டத்தால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு கோடி கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கி தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்தார். பாஜக அரசின் வஞ்சகத்துக்கும் பழனிசாமியின் துரோகத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

 தி.மு.க. கூட்டணியில்
ம.தி.மு.க.வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச்.12 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-இல் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கவனித்து வந்தனர்.

தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்து வருகிறது தி.மு.க. அந்த வகையில் ம.தி.மு.க.வுக்கு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் நேற்று (11.3.2026) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர். அதில் எதிர்வரும் தேர்தலில் மதிமுக 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவானது.

இதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தனி சின்னத்திலும் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை துறைமுகம் – மதுரவாயல்

இரண்டடுக்கு மேம்பாலப் பணிகள் 2027 இல் நிறைவடையும்

 தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்

சென்னை, மார்ச்.12 சென்னை –துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் 2027-ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அலு வலர் வீரேந்தர் சாம்பியால் தெரிவித்தார்.

மேம்பால பணிகள்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுகுறித்து, தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் கூறியதாவது

தொடக்கத்தில் ஒற்றை அடுக்காக திட்டமிடப்பட்ட இப்பாலம், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று.2அடுக்காக மாற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நகரப் போக்குவரத்துக்காக முதல் அடுக்கு. சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக 2-ஆவது அடுக்கு அமைக்கப்படுகிறது.

நகரின் முக்கிய பகுதிகளில் வாகனங்கள் பாலத் தில் ஏறவும். இறங்கவும் வசதியாக 13 சாய்தளங் கள் அமைக்கப்படுகின்றன. நேப்பியர் பாலம் பகுதியில் அதிநவீன கேபிள் பாலம் அமைக்கப்படுகிறது. போக் குவரத்து காவல்துறையினர் அனு மதியுடன் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என தினமும் 11 மணி நேரம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதை 16 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். 2027 டிசம்பருக்குள் திட்டம் நிறைவடையும்.

சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை (262 கி.மீ.) திட்டத்தில் கருநாடகப் பகுதி பணிகள் முடிந்து விட்டன. தமிழ்நாட்டில் உள்ள 106 கி.மீ. தொலை வில் 3 தொகுப்புகளின் பணிகள் முடியும் நிலையில் ளன. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. தற்போது ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் 77 இடங்களில் உள்ள தேசிய நெடுஞ் சாலை ஆணையசுங்கச்சாவடிகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.4,300 கோடி வசூலானது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆணையத் தின் சென்னை திட்ட இயக்குநர் சிவம் சர்மா கூறும்போது, பிரம்மாண்டமான வார்ப்புத் தளங்களில் பாலத்தின் கான்கிரீட் பாகங்கள் முன் கூட்டியே முழுவீச்சில் தயாரிக்கப்படுகின்றன. இதனால், மழைக்காலத்திலும் இடையூறின்றி மேம்பால கட்டு மானப் பணி நடைபெறும்” என்றார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *