ஆச்சாம்பட்டி, மார்ச் 11- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மை யாரின் 107ஆவது பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாளினையொட்டி 8.3.2026 அன்று பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம், பெரியார் மருந் தியல் கல்லூரி, உன்னத் பாரத் அபியான் திட்டம் மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை இணைந்து ‘மக்களை நாடி மருத்துவத்தினை பெரியார் புரா’ கிராமமான ஆச்சாம்பட்டி பகுதியில் 08.03.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தியது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை வழிகாட்டுதலில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் ‘பெரியார் புரா’ திட்ட இயக்குநர் முனைவர் ஆனந்த் ஜெரால்டு செபாஸ்டின், கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் சசிகலா, இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் காயத்ரி, வேதியியல் துறைத் தலைவர் முனைவர் சுந்தர நாயகி, ஆச்சாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் இராஜேந்திரன் மற்றும் மேனாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வல்லம் பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் மரு. சித்ரா, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் மேனாள் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மரு. ஆ.கனகராஜ் மற்றும் மருத்துவக்குழுவினர்கள் நடத்திய பொதுமருத்துவ முகாமில் 26 ஆண்கள், 39 பெண்கள், 15 குழந்தைகள் என மொத்தம் 80 மருத்துவப் பயனாளிகளும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் மரு. ராசாத்தி மற்றும் மருத்துவக் குழுவினர் நடத்திய மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையில் 25 பேரும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இப்பொது மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு மருந்து மாத் திரைகளை மருந்தாளுநர் துறை மாணவர்கள் அரிய பிரகாஷ் மற்றும் ஆதவன் ராஜா ஆகியோர் இலவசமாக வழங்கினர்.
பொதுமக்களுக்கு பெரியார் மருத்துவக் குழும செவிலியர்கள் காமாட்சி மற்றும் கலைச்செல்வி ஆகியோர் குருதி (இரத்த) அழுத்தம் மற்றும் குருதி (இரத்தச்) சர்க்கரை அளவினை கண்டறிந்தனர்.
இம்மருத்துவ முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிர்தொழில்நுட்பத் துறை பேராசிரியர் முனைவர் வி.சுகுமாரன், முனைவர் திலீப் ஜோஸ், முனைவர் சிறீ விந்த், முனைவர் சுபசிறீ மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் ஜெசிமா பேகம், பேராசிரியர் தினேஷ் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையைச் சார்ந்த நற்றிணை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
