சிலிண்டர் தட்டுப்பாடு! விறகு அடுப்புகளுக்கு மாறும் உணவகங்கள் பிரியாணி, பரோட்டா தயாரிப்பது நிறுத்தம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 11- ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்தி வரும் போர் எதிரொலியாக தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவக சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்று (10.3.2026) தமிழ்நாட்டில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் சென்னையில் பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில உணவகங்களில் உணவு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை, அமைந்தகரை, திருவான்மியூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பல பெரிய மற்றும் சிறிய உணவகங்களில் இதுகுறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக சென்னை உணவகங்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி உள்ளன. உணவகங்கள் பிரியாணி, பரோட்டா போன்ற உணவுகளை தவிர்த்து வருகின்றன. பல்வேறு உணவு வகைகள் கிடைக்காது என சென்னையில் உள்ள பிரபல உணவகங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் சமைக்கும் உணவுகளுக்கு மட்டும் உணவகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *