திருக்குவளை ரெ.ரெங்கநாதன் மறைவு: கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருக்குவளை, மார்ச் 10– நாகப்பட்டினம் மாவட்ட கழக கீழையூர் ஒன்றியத் தலைவர் திருக்குவளை  ரெ.ரெங்கநாதன் (வயது 82) அவர்கள் வயது மூப்பின் காரணமாக 7.3.2026 மாலை தஞ்சை தனியார் மருத்துவமனையில்   மறைவுற்றார்

8.3.2026 மாலை 4 மணியளவில் திருக்குவளை அவரது இல்லத்தில். மறைந்த ரெ.ரெங்கநாதன்  அவர் களுக்கு வீர வணக்க இரங்கல் நிகழ்வு நடைபெற்றது. மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ.மோகன் தலைமையேற்று  வீரவணக்க உரை யாற்றினார். மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், முன்னிலை வகித்து உரையாற்றினார்

மாவட்ட செயலாளர் ஜெ. பூபேஷ் குப்தா,  பகுத்தறிவாளர் கழக மாநில துணைச் செயலாளர் இல.மேகநாதன், கழக மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் பாவா. ஜெயக்குமார், திருக்குவளை ப.கவியரசன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் சு. கோலிளிச்செல்வன், திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் மு. குட்டிமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தங்க.கிருட்டிணன், ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர்.

மறைந்த ரெங்கசாமி, அவர்களின் மகன் திராவிட மணியிடம்,  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தொலைபேசி மூலம் இரங்கலும் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், அவர்களும் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.

ஆசிரியர் எழுதிய இரங்கல் செய்தியை வாசித்து அச்சிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும். அனைத்துக் கட்சியினரும் பொதுமக்களும் உறவினர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வீர வணக்கம்! வீர வணக்கம்!! சுயமரியாதைச் சுடரொளி. தந்தை பெரியார் பெரும் தொண்டர் திருக்குவளை ரெங்கநாதன், அவர்களுக்கு வீரவணக்கம். என்கின்ற கொள்கை முழக்கத்துடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *