வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 10.03.2026 அன்று அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கல்லூரி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இவ்விழாவில் இக்கல்லூரியின் முதல்வர் க.பெ.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 107ஆவது பிறந்த நாளான 10.03.2026 அன்று காலை 10 மணியளவில் அன்னையார் அவர்களின் உருவப்படத்திற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இளநிலை மருந்தியல் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி நூதன மணி, மணியம்மையார் அவர்களின் தொண்டறப்பணிகள் குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பணித்தோழர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு அன்னை மணியம்மையார் அவர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தினர்.
