சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு விதிப்பதா..? மம்தா கடும் கண்டனம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கொல்கத்தா, மார்ச் 8  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  ஒன்றிய அரசு மீது கடுமையான குற்றச் சாட்டுகளை முன்வைத் துள்ளார். அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலை மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.அய்.ஆர்.) செயல்முறை மூலம் மேற்கு வங்காளத்தை “உடைக்க” முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வில் மம்தா பேசியதாவது:-

சிலிண்டர் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இப்போது 21 நாட்களுக்கு முன்பே சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என ஏன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இடையில் சிலிண்டர் தீர்ந்து போனால் வீட்டிற்கு நேரடியாக உணவு டெலிவரி செய்வீர்களா? மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கூட குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறீர்கள். இந்த உயர்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன..?

ஓன்றிய அரசு, வங்காள மாநிலத்தை அரசியல் ரீதியாக குறிவைத்து தாக்குகிறது. இதனால்தான் எங்கள் வாக்குகளை நீக்க விரும்புகிறீர்களா? வங்காளத்தை உடைக்க விரும்புகிறீர்களா..? மற்றவர்கள் உங்களைப் பார்த்து பயப்படலாம், ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் உங்கள் முகமூடியை அகற்றுவோம்.

சிலிண்டர் விலை உயர்வு, மண்ணெண்ணெய் பற்றாக்குறை மற்றும் எஸ்.அய்.ஆர்.  செயல்பாட்டில் பெண்களின் பெயர்களை நீக்குவதற்கு எதிராக நாளை (9.3.2026) போராட்டம் நடத்தப்படும். “‘பாங் பெங்கால்’ என்ற திட்டம் உள்ளது, அது ஒரு திட்டமாகவே இருக்கும். முதலில் எப்ஸ்டீனைக் கையாளுங்கள். பின்னர் வங்காளத்தைப் பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *