புதுடில்லி, மார்ச் 8- இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க கல்வி விசா 69 சதவீதம் அளவுக்கு குறைந்தது உள்ளது. இந்திய மாணவர்களுக்கு 2018-இல் 26,506 எப்1 விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த 2019-இல் 26,247 விசாக்கள் விநியோகிக்கப்பட்டன. கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் 114 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே எப்1 விசா வழங்கப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டில் 40,194 பேர், 2022-ஆம் ஆண்டில் 62,229 பேர், 2023ஆம் ஆண்டில் 72,027 பேர், 2024ஆம் ஆண்டில் 41,336 இந்திய மாணவர்கள் எப்1 விசாக்களை பெற்றனர். ஆனால் கடந்த 2025ஆம் ஆண்டில் 12,776 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே எப்1 விசா வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2025-ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க கல்வி விசா 69 சதவீதம் வரை குறைந்து உள்ளது.
தற்போது அமெரிக்காவுக்கு மாற்றாக பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளில் கல்வி பயில இந்திய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
