திருமருகல், மார்ச் 8– நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கேதாரிமங்கலம் மறைந்த பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி திருவேங்கடம் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு 3.3.2026 காலை 8.30 மணிக்கு அவரது நினை விடத்தில் திருமருகல் ஒன்றிய கழகத் தலைவர் இராச .முருகையன் தலை மையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட கழகச் செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் நாகை.மு. இளமாறன், ஒன்றிய செயலாளர் சு.இராஜ் மோகன், ஒன்றிய துணைத் தலைவர் சின்னதுரை, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருமருகல் ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருவேங்கம் அவர்களின் குடும்பத்தினரான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.திருவேங்கடம் ரவி, இளங்கோ திருவேங்கடம், குணசேகரன் திருவேங் கடம் ஆகியோர் பங்கேற்றனர். திமுக சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ஆர்விஎஸ் ரபீக், ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராம்கி, திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலப் பிரிவு துணை அமைப்பாளர் பாஸ்போர்ட் சேகர், பன்னீர் செல்வம் ஆகி யோர் பங்கேற்றனர்.
