மதுரை, மார்ச் 7- 2025-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் நேற்று (6.3.2026) வெளியாகின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருந்தனர். அதில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி. இவர் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பயிற்சிப் பெற்றவர்.
இவர் ஏற்கெனவே டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சி யராக திண்டுக்கல் மாவட் டத்தில் பணியாற்றி வருகிறார். துணை ஆட்சியர் பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்குக் கடுமையாகப் படித்து வெற்று பெற்றுள்ளார்.
தான் பெற்ற வெற்றி குறித்து அவர் கூறியதாவது:
யு.பி.எஸ்.சி தேர்வில் “இந்திய அளவில் இரண்டாம் இடம்பிடித்தது ஆச்சரியமாக இருந்தது. நான் 2018இல் கல்லூரிப் படிப்பை முடித்தேன். இது ஒரு நீண்டபயணம். இப்போது சாத்தியமாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத் திற்கு நன்றிக்கூற வேண் டும். நான் இந்த திட்டத்தின் முதல் பேட்ச் மாணவி. 2024இல், முதல்நிலைத் தேர்விற்கான (Prelims) நிதியுதவி வழங்கப்பட்டவர்களில் நானும் ஒருவளாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது 10 மாதங் களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கினர். பின்னர், 2025இல் நான் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, முதன்மைத் தேர்விற்காக (Mains) பயிற்சி பெற்றேன்; அப்போது சுமார் 25,000 ரூபாயும், நேர்முகத் தேர்விற்கு 50,000 ரூபாயும் நிதியுதவி அளித்தனர்.
இந்த நிதியுதவியுடன் மட்டுமல்லாமல், ‘நான் முதல்வன்’ குழு சிறந்த ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் வழங்குகிறது. தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த ஆதரவு மிகப்பெரியது. நான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனது அப்பா ஒரு தொழிலதிபர். என் அம்மா துணை கணித பேராசிரியர்.” இவ்வாறு அவர் கூறினார்.
