சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப் பெருந் தகை, அதிமுக மற்றும் பாஜக இடை யிலான ரகசிய மற்றும் வெளிப்படை யான உறவுகளை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், “அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல். அந்தக் கப்பலில் யார் ஏறினாலும் அவர்களும் சேர்ந்துதான் மூழ்குவார்கள். மக்களின் நம்பிக்கையை இழந்த இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைய முயல்வது தற்கொலைக்கு சமமானது. தமிழ்நாட்டு மக்கள் இவர்களை என்றோ நிராகரித்துவிட்டனர்,” என்று தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், மூழ்கும் கப்பலான அதிமுக-பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
