பீகாரில் கபடநாடகம் ஆடிய பா.ஜ.க.வை அ.தி.மு.க. விரைவில் புரிந்து கொள்ளும் தொல். திருமாவளவன் எச்சரிக்கை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.7 பீகார் அரசியல் சூழல் மற்றும் தமிழ்நாடு அரசியல் நிலைப்பாடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதன் விளைவுகள் குறித்து அ.தி.மு.க-விற்கு அவர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குறித்துப் பேசிய அவர், “பீகார் மக்களிடையே நிதிஷ் குமாருக்கு நல்ல மரியாதையும், அவரது கட்சிக்கு எனத் தனிப் பாரம்பரியமும் இருந்தது. ஆனால், அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த நாள் முதல், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நன்மதிப்பு படிப்படியாகச் சரிந்து கொண்டே வருகிறது,” எனத் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியைத் துறந்து, மாநிலங்களவைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. திட்டமிட்டே இத்தகைய நிலையை உருவாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து அவர் கூறியதாவது: “நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட இதே நிலை அ.தி.மு.க-விற்கும் வந்துவிடக் கூடாது என்றுதான் நான் தொடக்கம் முதலே எச்சரித்து வருகிறேன். நான் இவ்வாறு கூறியபோது அ.தி.மு.க-வினர் என்னைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், பா.ஜ.க.வின் செயல்பாடுகளை அ.தி.மு.க. விரைவில் உணர்ந்து கொள்ளும். அப்போது எனது கருத்துகளின் பின்னால் உள்ள நியாயத்தையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.” என்றார் அவர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *