அசாம் மாநிலத்தில் நடந்த போர் விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கவுஹாத்தி, மார்ச்.7 அசாம் மாநிலத்தில் சுகோய் போர் விமானம் விபத் தில் சிக்கியதில் 2 பைலட்கள் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் போர் விமானம் நேற்று முன்தினம் (5.3.2026) பயிற்சிக்காக சென்றது. இதில் பிளைட் லெப்டினன்ட் பர்வேஸ் துரக்கர் (28), ஸ்குவார்டர்ன் லீடர் அனுஜ் ஆகியோர் சென்றனர்.

சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தை தேடிய போது, அசாம் மாநிலம் கார்பி அங்கிலாங் பகுதியில் நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல் போன பைலட்களை தேடும் பணி தொடங்கியது.

இந்நிலையில் அந்த விமானத்தில் சென்ற இரு பைலட்களும் உயிரிழந்ததாக விமானப்படை நேற்று (6.3.2026) அறிவித்தது. இவர்களில் பர்வேஸ் துரக்கர் கடந்தாண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராட்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பர்வேஸ் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் விமானப்படையில் சேர்ந்தார்.

அமெரிக்கா, ஈரான் போர்

 இந்தியாவில் பங்குச் சந்தை வீழ்ச்சி  முதலீட்டாளர்களுக்கு
ரூ.3 லட்சம் கோடி இழப்பு

மும்பை, மார்ச் 7அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று (6.3.2026) கடும் சரிவைச் சந்தித்தன. கடந்த சில வணிக தினங்களாகவே சரிவில் இருந்த சந்தை, போர்ச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து நிலைகுலைந்தது.

வாரத்தின் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட் டான நிஃப்டி (Nifty) ஆகியவை வர லாறு காணாத சரிவை நோக்கிச் சென்றன.

பங்குச்சந்தையின் இந்த திடீர் சரிவால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் சுமார் 16.32 லட்சம் கோடி ரூபாய் வரை துடைத்தெறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரூ.3 லட்சம் கோடி என்ற மதிப்பை விட, தற்போதைய கள நிலவரப்படி இழப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக வங்கி, தகவல் தொழில்நுட்பம் (அய்.டி.) மற்றும் ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்த பங்குகளின் விலை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *