தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தினை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நேற்று (4.11.2023) தொடங்கி வைத்ததை தொடர்ந்து, காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட அழகப்பா பல்கலைக்கழக நுழைவாயில் பகுதியில் நடைபெற்ற “நடப்போம் நலம் பெறுவோம்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் பங்கேற்று சிறப்பித்தார். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.