நேற்றைய (6.3.2026) தொடர்ச்சி
கருநாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற
நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கும் தலைவர் வீரமணி அவர்களே! பேராசிரியர் ரவிவர்மகுமார் அவர்களே! பேராசிரியர் நரேந்திரநாயக் அவர்களே! நானும், ரவிவர்மகுமார் அவர்களும் ஒன்றாக சட்டப்படிப்பு படித்தோம். ரவிவர்மகுமார் முதல் வரிசையில் பெரியார் அமர்ந்திருந்தார் – நான் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். இது நடந்தது – 1973ஆம் ஆண்டு நடைபெற்ற டவுன் ஹால் பொதுக்கூட்டமாகும். இக்கூட்டத்தில்தான் நான் பெரியாரை முதன்முதலாகப் பார்த்தேன். அன்று என்னுள் சென்ற பெரியாரின் கொள்கை – என்னை சிறந்த நீதிபதியாக சிறந்த உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆக்கியது என்பதுதான் உண்மை.
அன்று தொடங்கிய பெரியார் சிந்தனை – சுயமரியாதை கருத்து இன்றும் தொடர்கிறது. தலைவர் வீரமணி அவர்கள் பெரியாரின் மறு உருவமாக இருக்கிறார். பெரியாரின் தொண்டு தமிழ்நாடு மட்டுமல்லாது, கருநாடகத்திலும் தொடர வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். உண்மை முகம் என்ற
நூல் ஆசிரியர் ஹனுமே கவுடா

நான் ஆர்..எஸ்.எஸ்.-இல் உண்மையாக இருந்த போது நான் உள்ளே சென்று உழைத்தேன். 43 ஆண்டு உள்ளே இருந்தேன். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதே ஆர்.எஸ்.எஸ். அவர்கள் இந்துத்துவா என்பதே பொய்யாகும். அவர்கள் நோக்கம் தீய சக்தியாக செயல்படுவதே ஆகும். உலகிலேயே மிகப் பெரிய தீய சக்தி ஆர்.எஸ்.எஸ். ஆகும்.
இந்த ஆங்கில நூல் விரைவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு சென்னையில் வெளியிடப்படும் என்று கூறி ஹனுமே கவுடா அவர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் சிறப்பு செய்தார்.
தலித் இயக்க முன்னணி தலைவர் மாவள்ளி சங்கர்

சூத்திரனுக்கு ஞானபீட விருதா?
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில், பெருமை கொள்கிறேன். தலைவர் வீரமணி அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமை கொள்கிறேன். தந்தை பெரியாரை பார்த்ததில்லை; ஆனால் வீரமணி உருவில் தந்தை பெரியாரைப் பார்க்கிறேன்.
சூரியன் சந்திரன் உள்ளவரை தந்தை பெரியாரின் புகழ் நிலைக்கும்; கடைசி ஸநாதனம் இருக்கும் வரை பெரியாரின் தேவை தொடரும். பெரியாரும் அம்பேத்கரும் சூத்திரர்களின் வழிகாட்டிகளாவார்கள்.
சமீபத்தில் கருநாடகத்தில் ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டுள்ளது. அது என்னவென்றால், குவெம்பு என்பவர் கன்னட இலக்கியத்தில் மிகப் பரிய ஜாம்பவான் ஆவார். குவெம்புவை விடுத்து கன்னட இலக்கியம் எழுத முடியாது. இவருக்கு – இவரின் எழுத்துக்கு ‘ஞான பீட விருது’ வழங்கப்பட்டது.
ஆனால், “வைதீக பார்ப்பனர்கள் ஒரு சூத்திரனுக்கு எப்படி ஞானபீட விருது வழங்கலாம்” என்று விமர்சனம் செய்கின்றனர். இந்த இடத்தில் தான் பெரியாரும் அம்பேத்கரும் தேவைப்படுகின்றனர். ஹீப்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவரை – உடைகளை அகற்றி தண்டனை கொடுத்துள்ள மேல் ஜாதி ஆதிக்கம் இன்றும் நிலவுகிறது. வட கருநாடகத்தில் இன்றும் சில பகுதிகளில் ஜாதிய – தீண்டாமை நிலவுகிறது. மேல் ஜாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கும் கொடுமைகள் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் வடகருநாடகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி ஆதிக்கம் நிலவுதான் என்பதுதான உண்மையாகும். எங்கெல்லாம் ஜாதீய ஆதிக்கம் ‘இந்துத்துவா’ ஆதிக்கம் உள்ளதோ அங்கெல்லாம் பெரியாரும் அம்பேத்கரும் தேவைப்படுகின்றனர்.
தலைவர் வீரமணி அவர்களைப் பார்த்ததும் -பேசியதும் எங்கள் கொள்கைக்கு உந்து சக்தியாக உள்ளது.
ஜெய்பீம்! ஜெய் கருநாடகா!
சீர்திருத்த எழுத்தாளர் மேனாள் அமைச்சர் பி.டி.லலிதா நாயக்

‘சுவாபிமானா சங்கத‘ (சுயமரியாதை இயக்க) நூற்றாண்டு விழாவில், கலந்து கொள்ள வாய்ப்பளித் தோருக்கு முதலாவதாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சுவாபிமானா’ (சுயமரியாதை) ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேவையான ஒன்றாகும். மேல் ஜாதியாக இருந்தாலும், கீழ் ஜாதியாக இருந்தாலும் ‘சுயமரியாதை’ தேவையாகும. இந்த ஜாதி வேறுபாடே கூடாது என்பதுதான் நம் கொள்கையாகும். இதைத்தான் சர்வஞ்யா, பசவண்ணர் போன்றோர் கூறியுள்ளனர். பெரியார் அவர்களும் இவர்கள் கூறிய கருத்துகளை இன்னும் வேகமாக – அதிகமாக – தீவிரமாக கூறினார்.
கழகத் தோழர்களால்
கழகத் தலைவருக்கு அன்போடு சூட்டப்பட்ட மணிமகுடம்

பிராமணர்களும், பூசாரிகளும் தங்கள் நன்மைக்காகவே கடவுளை உயர்த்திப் பிடிக்கின்றனர். சிவராத்திரி என்றால், கடவுளுக்கு சிவராத்திரியல்ல, பூசாரிகளுக்குத் தான் சிவராத்திரியாகும் பூசாரிகள் தான் தூங்காமல் உள்ளனர் தேவரு (கடவுள்) எப்பவும்போல் தான் சிவராத்திரி அன்றும் உள்ளார்.
பெரியார் ஏன் தேவரு இல்லை என்று சொன்னார். கடவுளுக்கும் பெரியாருக்கும் என்ன பிரச்சினை? சிந்திக்க வேண்டாமா? பார்ப்பனர்களும் பூசாரிகளும் செய்யும் கொடுமைகளைப் பார்த்துதான், உச்சகட்டமாக ‘தேவரே’ இல்லை என்று கூறினார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

நம்முடைய புராணக் கதைகள் பெண்களை எவ்வளவு இழிவாக எழுதி உள்ளன என்பதைப் படித்தால், எப்படி அந்த கதைகளை ஏற்றுக் கொள்ள முடியும். பெண்களுக்கு சம உரிமை வேண்டாம் என்பதே மனுதர்மமாகும். பெண்களுக்கு கல்வி, வேலை, வாழ்க்கை ஆகியவற்றில் சம உரிமை வேண்டும் என்று பெரியார் கூறியது தவறா?
ஜோதிடர்கள் புளுகு கொஞ்சமா? சமீபத்தில் மண்டியாவில் ஒரு குடும்பத்திற் ஜோதிடம் சொல்ல போன ஜோதிடர் – கணவன் வேறு திருமணம் செயது கொண்டால், இந்தக் குடும்பம் வளர்ச்சி பெறும் என்று அந்த குடும்பத்தையே பிரித்துவிட்டார். அந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பிறகு காவலர்கள் அழைத்து அந்த ஆணை எச்சரித்து அனுப்பினர். ஜோதிடர்கள் இந்த வேலையைக் கண்டால் – எப்படி ஜோதிடத்தை ஏற்றுக் கொள்ள முடியும்? பொதுவாகவே, இரண்டு ஜோதிடர்கள் ஒரே கருத்தை கூறுவதில்லை. ஒரு ஜாதகத்துக்கு இரு ஜோதிடர்கள் கருத்து ஒன்றாக இல்லாத நிலையில் – எவ்வாறு ஜோதிடத்தை நம்ப முடியும்?
ஊடகவியலாளர் முத்துமணி நன்னன்

கடவுள், ஜோதிடம் ஆகியவற்றை மூடநம்பிக்கையை பெரியார் இதனால்தான் எதிர்ததார். கடவுளை நம்பாத சோதிடத்தை நம்பாத – மூடநம்பிக்கையை நம்பாத பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்தாரே, இவைகளின் சக்தி ஏன் பெரியாரிடம் செல்லுபடியாகவில்லை.
எனவே மக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும். பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும். இதுதான் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் நாம் ஏற்க வேண்டிய சபதம் ஆகும்.
இவ்வாறு பி.டி.லலிதா நாயக் பேசினார்.
சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வன் அர்ஷத் (கன்னட உரை)

தன் உரையில் குறிப்பிட்டதாவது: தமிழ்நாட்டில் தோன்றிய இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழா பெங்களூரில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமையாகும். பெரியார் ராமசாமி தோற்றுவித்த இயக்கம் – இன்று தலைவர் வீரமணி அவர்கள் காலத்தில் நூறாண்டு கொண்டாடுவது, இன்றைய மதச் சார்பற்ற இந்திய அரசியலை மதவாத சக்திகள் அழிக்காமல் பாதுகாக்க மதச்சார்பறற சக்திகள் தேவையான ஒன்றாகும். இன்று சிறுபான்மையினர் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரியார் கருத்தால், கொள்கையால் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்த சுயமரியாதை இயக்க வழிவந்த – தமிழ்நாடு அரசு அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது. சுயமரியாதை (சுவாபிமானா) என்ற சொல்லே சமத்துவத்தின் அடையாளமாக உள்ளது.
சமூக செயற்பாட்டாளர் நாகரத்னா (கன்னட உரை)
கருநாடக மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பல அரசியல் பிரச்சினைகளிலிருந்தாலும் – தந்தை பெரியாரின் கொள்கை, சுயமரியாதை இயக்கம் நம்மை இணைக்கின்றன. இந்தியாவிலேயே பெண்கள் உரிமை குறித்து நூறு ஆண்டுகளுக்கு முன்னமே, பெரியார் பேசியிருக்கின்றார். கருநாடகத்தில், சர்வக்ஞர், பசவண்ணன் போன்றோரைவிட மிகத் தீவிரமாக பெரியார் பெண்களுக்காகப் போராடியுள்ளார். இன்றும் கருநாடகத்தின் வடபகுதியில் பெண்ணடிமைக் கருத்துகள் உள்ளன என்பது வேதனைப்படக் கூடியதாகும்.
வழக்குரைஞர் குணவேந்தன்

புலவர் காத்தியாயினி
பல நூறு ஆண்டுகளாக அடிமையாகக் கிடந்த பெண் சமுதாயத்தை – சம உரிமை தளத்திற்கு கொண்டு வந்தவர் தந்தை பெரியார் ஆவார். தமிழ் இலக்கியங்களில்கூட, பெண்ணுரிமை பேசப்படவில்லை. பல இலக்கியங்களிலும் பெண்ணடிமைக் கருத்துகளே உள்ளன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்கள், இயக்கங்கள் தான் பெண்ணடிமை ஒழிப்பைப் பற்றி பேசி – பெண்ணுரிமைக்காகப் போராடின. தந்தை பெரியார் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்களின் விடுதலையை உயர்த்திப் பிடித்தார். இன்று நம் தலைவர் ஆசிரியர் அவர்கள் அய்யா வழியில் அடிமாறாமல் – அரசியல் ஈடுபாடில்லாமல இந்த இயக்கத்தை கொண்டு செல்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்.
ஜானகிராமன்

சிதம்பரம் மாவட்டத் தலைவர்
பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
இந்த மன்றம் அமைந்திருக்கும் பெயரே, தேவராஜ் அர்ஸ் அரங்கமாகும். தந்தை பெரியார் எந்த வகுப்புரிமை கொள்கைக்காக சுயமரியாதைக் கொள்கைக்காக போராடினாரோ, அக்கொள்கைகளை கருநாடக மண்ணில் எதிரொலித்தவர் தேவராஜ் அர்ஸ் ஆவார்.
எனவே, கருநாடக மேனாள் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் குறித்து சில செய்திகளை நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1981ஆம் ஆண்டு, கருநாடக திராவிடர் கழகத் தொண்டராக இருந்த சிவன்செட்டி கார்டனைச் சேர்ந்த கதிரவன் அவர்கள் இல்லத் திருமணம் நினைவுக்கு வருகிறது. காலையில் தமிழர் தலைவர் பேசுகின்றபொழுது, இத்திருமணம் குறித்து தொட்டுச் சென்றார், அதனை விரிவாக விளக்க விரும்புகிறேன்.
முல்லைக்கோ

கதிரவன் இல்லத் திருமணத்திற்கு கருநாடக மேனாள் முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் தேவராஜ் அர்ஸ் இல்லத் திருமணத்திற்கு – அவரை அழைக்க, அன்றைய கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் ந.அர்ச்சுனன், செயலாளர் மு.சிரதாநந்தம், திருமண வீட்டுக்காரர் கதிரவன், நான் ஆகிய நால்வரும் – தேவராஜ் அர்ஸ் இல்லம் சென்று சுயமரியாதைத் திருமணம் நடத்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வருகிறார்கள். நீங்களும் வரவேண்டும் என்று அழைத்தோம். தேவராஜ் அர்ஸ் அவர்கள் “அது என்னப்பா “சுவாபிமானா மதுவே’? (சுயமரியாதைத் திருமணம்)” என்று கேட்டார். நாங்கள் பதில் சொன்னோம். அவர் திருமணத்திற்கு “நான் மாங்கல்யம் தருகிறேன்” என்று கூறினார். நாங்கள் இத்திருமணத்தில் மாங்கல்யம் கட்டுவதில்லை என்று பதில் கூறினோம். அவருக்கு வியப்பாக போய்விட்டது. அவர் “அது என்னப்பா மாங்கல்யம் இல்லாத திருமணம்?” என்று கேட்டார். பிறகு கல்யாணம் எத்தனை மணிக்கு என்று கேட்டார். நாங்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்தில் என்று கூறினோம். அவர் வியப்பின் எல்லைக்கே சென்று – “அது என்னப்பா… தாலி இல்லை, மந்திரம் இல்லை, புரோகிதர் இல்லை, ராகு காலத்தில் என்கிறீர்கள்” நான் கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும், அவசியம் வருகிறேன் என்று ஒப்புதல் கொடுத்தார்கள். பெங்களூர் ‘கண்டோன்மென்ட்’ காமராசர் சாலையில் நாகா தியேட்டர் பக்கத்தில் இருந்த திருமண மண்டபத்தில் நடைபெற்றது அத்திருமணம்.
மொழிபெயர்ப்பு – தொகுப்பு:
பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன்

தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்கள் மாலை 4.15 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்றோம். எங்களுக்கு முன்னதாகவே, தேவராஜ் அர்ஸ் அவர்கள் வந்து அமர்ந்திருந்தார். எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி “இந்தத் திருமணத்தை முதலிலிருந்தே காண வேண்டும் என்பதால் முன்னே வந்துவிட்டேன்” என்று கூறினார் அந்த பிற்படுத்தப்பட்டோர் இனத்தின் சிற்பி.
திருமணம் தொடங்கியது, தலைமையேற்று ஆசிரியர் நடத்தி வைத்தார். தேவராஜ் அர்ஸ் அவர்களிடம் இத்திருமணத்தை அறிஞர் அண்ணா 1967இல் ஆட்சி அமைத்தவுடன், சட்டமாக்கினார் என்றும், அதுவரை பல்லாண்டுகளாக நடைபெற்ற இந்த சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாமல் இருந்தது என்று விளக்கமாக ஆங்கிலத்தில் கூறினார்.
ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று, தேவராஜ் அர்ஸ் “எனக்கு இத்திருமணம் பற்றி இதுநாள் தெரியவில்லை. தெரிந்திருந்தால் – அறிஞர் அண்ணா செய்ததுபோல் நானும் ஆட்சியில் இருக்கும் போது செய்திருப்பேன்” என்று கூறினார். அடுத்து, “நான் தான் ஆட்சி அமைப்பேன். வருகின்ற தேர்தலில், இந்த பார்ப்பன பையனை துரத்திவிட்டு – ஆட்சி ஏற்றவுடன் நான் செய்யப் போகும் சட்டம். இந்த சுயமரியாதைத் திருமண சட்டம் தான் என்பதை வீரமணி அவர்களுக்கு உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்” என்றார். (அப்பொழுது முதலமைச்சராக இருந்தவர் ஆர்.குண்டுராவ், இவரைத்தான் “பொம்மன் மகன்” (பார்ப்பனப் பையன்) என்று கூறினார்).
ஆனால், நம் கெட்ட வாய்ப்பு அடுத்த தேர்தல் வருவதற்குள் – சுயமரியாதைச் செம்மல் – பிற்படுத்தப்பட்டோரின் பாதுகாவலன் தேவராஜ் அர்ஸ் அவர்கள் காலமாகிவிட்டார்கள். எனவே, இந்த கட்டடத்திற்குரிய தலைவர் தேவராஜ் அர்ஸ் குறித்து பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
