‘ஏஅய்’ முடிவுகளை நம்பலாமா?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பன்னாட்டுச் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வருபவர்கள் சூரிய உதயத்தைப் பார்த்து ரசிப்பார்களோ இல்லையோ, இனி இந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்தால் நிச்சயம் மயங்கி விழுந்துவிடுவார்கள். கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்திற்கு வைக்கப்பட்டுள்ள ஹிந்திப் பெயர்தான் இப்போது சமூக வலைதளங்களில் ‘சிரிப்பதா? அழுவதா?’ என்ற ரகத்தில் பரவலாகி வருகிறது.

பொதுவாக ஹிந்தியில் கழிப்பறையை கிழக்கு இந்தியாவில் சவுச்சாலயம் என்றும் மத்திய இந்தியாவில் சோச்சாலை என்றும் வடக்கு மாநிலமான ஹிமாச்சல், உத்தராகண்ட், உபியில் வடக்கு பகுதியில் ‘பிரயாக்’ என்றும் ராஜஸ்தான் குஜராத் மகாராட்டிராவில் பைகானா என்றும்  என்று நாகரிகமாக அழைப்பார்கள். ஆனால், நவீனத் தொழில்நுட்பமான ‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (AI) டிரான்ஸ்லேட் புண்ணியத்தில், ‘பொதுக் கழிப்பிடம்’ என்பது ஹிந்தியில் ‘சார்வஜனிக் டட்டியா’ (Sarvajanik Tattiya) என்று உருமாறியுள்ளது.

இந்த ‘டட்டியா’ என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் தெரிந்தால் எவருமே அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள். ஏனெனில், ஹிந்தியில் ‘டட்டி’ (Tatti) என்பது மலத்தைக் குறிக்கும் மிகவும் கொச்சையான சொல். எளிமையாகச் சொன்னால், ‘பொதுக் கழிப்பிடம்’ என்பதற்குப் பதிலாக ‘பொது மலம்’ என்று போர்டு வைத்துப் பெருமை சேர்த்திருக்கிறது நிர்வாகம்!

கேரளா முதல் காஷ்மீர் வரை சுற்றுலாப் பயணிகள் குவியும் ஒரு இடத்தில், ஒரு வார்த்தையை மொழிபெயர்க்கும்போது குறைந்தபட்சம் ஒரு ஹிந்தித் தெரிந்த நபரிடமாவது கேட்டிருக்கலாம். அல்லது ஒரு ஹிந்தி அகராதியைப் புரட்டியிருக்கலாம். அதை விடுத்து, அதீத நம்பிக்கையில், ஏஅய் கொடுத்ததைக் அப்படியே அச்சுப் பிசகாமல் போர்டாக அடித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

‘மொழிபெயர்ப்பு’ என்பது உணர்வுகளைக் கடத்துவது, ஆனால் இங்கே அது ‘உபாதையை’ தவறாகக் கடத்திவிட்டது. பெயர்ப்பலகை வைக்கும் காண்டிராக்டருக்கு ஹிந்தி தெரியாது சரி, அதைச் சரிபார்க்க வேண்டியவர்களுக்காவது ‘சவுச்சாலய்’ என்ற வார்த்தை காதில் விழுந்திருக்க வேண்டாமா?

தற்போது இந்த ‘கொடூர’ மொழிபெயர்ப்பு, வட இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிய நகைச்சுவை விருந்தாக அமைந்துள்ளது. குமரிக்கு வரும் ஹிந்திக் காரர்கள் இயற்கை உபாதைக்காகத் தேடி வந்து, இந்தப் பெயரைக் கண்டு மிரண்டு ஓடுவதைத் தவிர்க்க முடியாது!

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *