தீண்டாமை எனும் நீங்காத கறை! ஆந்திர சட்டமன்ற உறுப்பினருக்கு நேர்ந்த அவமானம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கியிருந்தாலும், நடைமுறையில் ஜாதியப் பாகுபாடுகள் இன்னும் வேரூன்றி இருப்பதை ஆந்திராவில் நடந்த ஒரு சமீபத்திய சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இதுவரை தோல்வியையே சந்திக்காத சட்டமன்ற உறுப்பினருமான கோவிக்காப்புடி சீனிவாசராவ் அவர்களுக்கு நேர்ந்த இழிவு, சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலிமையான ஆளுமை

ஆந்திர அரசியலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு வலிமையான ஆளுமையாக சீனிவாசராவ் அறியப்படுகிறார். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இவருக்கு, இம்முறை சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், மன அமைதி வேண்டி அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றார்.

ஆந்திரா நெமேலியில் உள்ள புகழ்பெற்ற கோவிந்தராஜாசாமி கோவிலுக்குச் சென்ற சீனிவாசராவ், சுவாமிக்கு சமர்ப்பிப்பதற்காகப் பட்டாடைகள் மற்றும் பூஜைப் பொருட்களைக் கொண்டு சென்றார். அங்கு அர்ச்சகர்களிடம் அந்தப் பொருட்களை அவர் நீட்டியபோது, “நேரடியாக உங்கள் கையில் இருந்து வாங்க முடியாது” என்று கூறி அவர்கள் வாங்க மறுத்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி, அதுவும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல், அவரது சமூக அடையாளத்தைக் காரணம் காட்டி தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தச் செயலால் கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள் கோவிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், பதற்றத்தைத் தவிர்க்க விரும்பிய சீனிவாசராவ், தனது ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்தினார். இறுதியில், தான் கொண்டு வந்த பொருட்களைத் தரையில் வைத்துவிட்டு, மனவேதனையுடன் தனது குடும்பத்தாருடன் அங்கிருந்து வெளியேறினார்.

முன்வைக்கப்படும் கேள்விகள்

அரசியல் அதிகாரம் பாதுகாப்பற்றதா? ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண எளிய மக்களின் நிலை என்ன?

சட்டமும் யதார்த்தமும்: தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றனவா?

மனிதாபிமானம் எங்கே? பக்தி செலுத்தும் இடத்தில்கூட மனிதர்களை மனிதர்களாகப் பார்க்க மறுக்கும் மனநிலை எப்போது மாறும்?

வெற்றியின் உச்சத்தில் இருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியையே தீண்டாமை எனும் கொடுமை பதம்பார்த்துள்ளது. இது தனிப்பட்ட ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் விடுக்கப்பட்ட சவால். சமூக நீதி பேசும் அரசியல் கட்சிகளும், அரசும் இத்தகைய செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமூக மாற்றத்திற்கான அடித்தளத்தையும் உருவாக்க வேண்டும்.

400 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜிக்கும் இதே அவமானம் நேர்ந்தது தனது குடும்பத்தினர் கட்டிய துல்ஜாபாவானி கோவிலுக்குச் சென்ற சிவாஜியை “கோயில் பிரகாரத்தில் கால்வைக்காதே நீ சூத்திரன்” என்று கூறி விரட்டிவிட்டார். ஒரு பார்ப்பன அர்ச்சகர் இதனை அடுத்து படை வாரங்களோடு வந்த சிவாஜி தலை கவிழ்ந்து திரும்பிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *