உலக அரங்கில் இந்திய அரசியல்: ஒரு நுணுக்கமான பார்வை ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையும், அந்நாட்டின் தலைவரை உலக நாடுகள் எப்படிப் பார்க்கின்றன என்பதும் அந்த நாட்டின் மதிப்பிற்கு மிகவும் முக்கியமானது.
சமீபகாலமாக, இந்திய அரசியலையும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளையும் உலக நாடுகள் மிகவும் நுணுக்கமாகக் கவனித்து வருகின்றன.
இதற்கான ஒரு சமீபத்திய உதாரணம்தான் கனடிய பிரதமர் மார்க் கர்ணியின் பேட்டி.
சமீபத்தில் இந்தியா வந்து சென்ற கனடிய பிரதமர் மார்க் கர்ணி, தனது பயணத்திற்குப் பிறகு அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியிடம் பேசுகையில் பிரதமர் மோடி குறித்துக் குறிப்பிட்ட விஷயங்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
நரேந்திர மோடி குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கர்ணி, “அவர் வாரத்திற்கு ஒருமுறை எங்காவது பயணம் செய்துவிடுவார். அவர் செல்லுமிடமெல்லாம் 25,000 பேர் ஒன்று கூடி ‘மோடி… மோடி…’ என்று கோஷமிடுவார்கள். அவரும் கையாட்டிக்கொண்டே செல்வார்,” என்று நகைச்சுவை தொனியில் குறிப்பிட்டார்.
இது வெறும் நகைச்சுவையாகத் தெரிந்தாலும், ஒரு நாட்டின் பிரதமருக்கான மரியாதை உலகத் தலைவர்களிடையே கேலிக்குரிய ஒன்றாக மாறுகிறதோ என்ற அச்சத்தை இந்திய அரசியல் நோக்கர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
மன்மோகன் சிங் தன்னுடைய நிதானமான மற்றும் அறிவார்ந்த அணுகுமுறை பன்னாட்டு மதிப்பு பொருளாதார நிபுணர் என்ற முறையில் உலக நாடுகளால் மதிக்கப்பட்டார் அமெரிக்கா முதல் அய்ரோப்பா வரை அவர் மீது தனி மரியாதை இருந்தது
தற்போதைய பிரதமர் மோடி பிரதமரான பிறகு, இந்தியாவிற்கு அவரது சுய ஆடம்பரச் செயல்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்கள் பெரும் தலைவர்களிடையே கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.
“மக்கள் கூட்டத்தையும், கோஷங்களையும் கொண்டு ஒரு நாட்டின் வளர்ச்சியை உலகிற்கு நிரூபிக்க முயல்வது, அந்தத் தலைவரின் தனிப்பட்ட விளம்பரமாகவே பார்க்கப்படுகிறது, நாட்டின் ராஜதந்திர வெற்றியாக அல்ல.”
உலக நாடுகள் இந்திய அரசியலை மிகத் தெளிவாகக் கணித்து வருகின்றன. உள்நாட்டில் காட்டப்படும் பிம்பம் வேறு, உலக அளவில் தலைவர்கள் மத்தியில் நிலவும் கருத்து வேறு என்பதை மார்க் கர்ணியின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
இந்தியாவிற்கான தனி மரியாதை என்பது தனிநபர் புகழ்ச்சியில் இல்லை, அது நாட்டின் ஆழமான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் மட்டுமே அடங்கியுள்ளது என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது.
