சென்னை, மார்ச் 6 நாட்டிலேயே முதல் முறையாக, ஒன்பது அடுக்குகளுடன், 30 மீட்டர் உயரத்தில், ‘சூப்பர் ட்ரீ டவர்’ எனும் செங்குத்து தோட்டத்துடன் கூடிய உயர் கோபுர மர கட்டடம், நூற்றாண்டு பூங்காவில் திறக்கப்பட்டு உள்ளது.
கிண்டியில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான, 118 ஏக்கர் நிலம் மீட்கப் பட்டு, தோட்டக்கலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இங்கு, சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை மாநகராட்சி வாயிலாக நான்கு குளங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
இப்பூங்காவில், கருத்தியல் தோட்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், பறவை திட்டுக்கள், நீரியல் தோட்டம், பசுமை புல்வெளி, அடர்வனம், காட்சி மேடை, நடைபாதை உள்ளிட்ட கட்டட மைப்புகள், 25 ஏக்கரில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக, 37.8 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இப்பணிகளுக்கு, தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி வாயிலாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.3.2026) அடிக்கல் நாட்டினார்.
தேனாம்பேட்டை நூற்றாண்டு பூங்காவில், கண்ணாடி மாளிகை, ஜிப்லைன், பறவையகம், இசை நீரூற்று, மரவீடு, பனிமூட்ட பாதை உள்ளிட்ட, பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது, சென்னை நகரின் அழகை, வான்வழிப் பார்வையில் காண்பதற்காக, 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாட்டிலேயே முதல் முறையாக, 30 மீட்டர் உயரம் கொண்ட ‘சூப்பர் ட்ரீ டவர்’ எனும் செங்குத்து தோட்டத்துடன் கூடிய உயர் கோபுர மர கட்டடம் அமைக்கப்பட்டு உள்ளது.
இது, ஒன்பது அடுக்குகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (5.3.2026) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் முருகானந்தம், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி, இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
30 மீட்டர் உயரத்தில் 9 அடுக்குகளுடன் ‘சூப்பர் ட்ரீ டவர்’ நுாற்றாண்டு பூங்கா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
Leave a Comment
