தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றிய மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் நேற்று (12.4.2023) மாலை சைதை தேரடியில் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற இக்கண்டனப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். மேலும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் இ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இக்கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சென்னை துணை மேயர் மு. மகேஷ்குமார், தி.மு.க. வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்துமாணிக்கம், ச. அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், தி.மு.க. முன்னணியினர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம்
Leave a Comment