‘இதுதான் அமெரிக்கா கூறிய மீட்பு’ 165 குழந்தைகளை புதைக்கத் தோண்டிய குழிகளின் படத்தை பகிர்ந்த ஈரான்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெஹ்ரான், மார்ச் 5- அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த 28.2.2026 அன்று ஈரானுக்கு எதிராக தாக்குதலை தொடங்கியதில் இருந்து நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் மினாப் பள்ளியின் மீதான தாக்குதல்.

தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் ஆரம்பப் பள்ளிமீது 28.2.2026 அன்று காலை தாக்குதல் நடத்தியது அமெரிக்கா மற்றும் ஈரான்.

இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 165 முதல் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர்.

ஈரான்மீது கடந்த நான்கு நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் என இரண்டு நாடுகளும் தாக்குதலை தொடர்ந்தாலும், இந்தத் தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து சிலர் பேசிய காட்சிப் பதிவுகளும், குருதிக் கறைகளுடன் உள்ள பள்ளிப்பை ஒளிப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

இறந்த குழந்தைகளின் சடலங்கள்

இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது. அமெரிக்கத் தரப்பில் அமெரிக்கா பள்ளிகளை குறிவைக்காது, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் இறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை புதைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளின் ஒளிப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது. இது இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் ஒளிப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்,

“அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரு தொடக்கப் பள்ளியில் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளுக்காக தோண்டப்பட்ட கல்லறைகள். அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளன

மிஸ்டர் ட்ரம்ப் வாக்களித்த ‘மீட்பு’ (rescue) என்பது நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறது. காசா முதல் மீனாப் (Minab) வரை, அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *