106 வயது பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலுவை நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

மூத்த பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலு (வயது 106) சற்று உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் அவரை சந்திக்க திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 93 வயதிலும் 3 மாடிகள் ஏறிச் சென்று வேலுவை சந்தித்து பயனாடை அணிவித்து நலம் விசாரித்தார். வேலு அவர்கள் உடனே எழுந்து நின்று தமிழர் தலைவருக்கு அன்போடு பயனாடை அணிவித்து கட்டிப் பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். தமிழர் தலைவர் அவரிடம் நீங்கள் ஏராளமான பகுத்தறிவு நாடகங்களை நடத்தி உள்ளீர்கள். அதில் நீங்கள் நடத்திய நாடகங்கள் பற்றியும், அதில் வந்த வசனங்கள் நினைவிருக்கிறதா? எனவும் கேட்டவுடன் வேலு அவர்கள் தான் நடத்திய செருப்படி மாரியம்மன் போன்ற பல்வேறு நாடகங்களில் வந்த வசனங்களை எடுத்துக் கூறியும் அதில் இடம் பெற்ற பாடல்களை பலத்த சத்தத்துடன் நாடகம் நடப்பது போலவே எடுத்து கூறியது மிகுந்த வியப்பைத் தந்தது. தமிழ்நாட்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று வந்த பழைய நினைவுகளையெல்லாம் விரிவாக எடுத்துக் கூறியது அவரது நினைவாற்றலை பறைசாற்றும் வண்ணம் இருந்தது. எந்த வயது ஆனாலும் கொள்கை உணர்வோடு இருப்பதை பார்த்து பாராட்டினார் தமிழர் தலைவர். அவரது குடும்பத்தினரிடம் வேலுவை பற்றியும், அன்றாட செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்து பாதுகாப்பாக அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். வீ.மு. வேலு அவர்களின் முதல் தலைமுறையும் அவர் வழிவந்த நான்காவது தலைமுறையும் தமிழர் தலைவரை வரவேற்றது, பாராட்டத்தக்கதாக இருந்தது. (பெங்களூரு, 28.2.2026)

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *