மாட்ரீட், மார்ச்.5 ஸ்பெயின் அரசு மேற்கொண்டு வரும் சில வரி சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. குறிப்பாக, அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் டிஜிட்டல் வரிகள் தொடர்பாக, அமெரிக்கா வர்த்தகத் தடைகளை விதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு அந்நாட்டு பிரதமர் கூறும் போது அமெரிக்காவின் வர்த்தக ரீதியான அழுத்தங்கள் அல்லது மிரட்டல்கள் காரணமாக ஸ்பெயினின் இறையாண்மை மற்றும் உள்நாட்டுக் கொள்கை முடிவுகளில் எந்த மாற்றமும் இருக்காது எங்கள் நாட்டின் பொருளாதார நலன்களையும், மக்களின் உரிமைகளையும் காக்க வேண்டியது எங்களது கடமை. வெளிநாட்டு அழுத்தங்களுக்காக நாங்கள் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம்.” என பிரதமர் சான்சஸ் கூறியுள்ளார்.
