கோவை, மார்ச் 3- கோவை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 01,03.2026 அன்று மாலை 6 மணி அளவில் சுந்தராபுரம் சந்திரசேகர் இல்லத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மாநகர செயலாளர் புலியகுளம் க.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் முத்துமாலையப்பன், மாவட்ட இளைஞரணி செய லாளர் சா.ராஜா, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அக்ரி நாகராஜ், கணபதி பகுதி கழக செயலாளர் திராவிடமணி, பீளமேடு பகுதி செயலாளர் மா.ரமேஷ், பா. சிவகுமார், ச.திலகமணி, குறிச்சி இர.முத்து கணேஷ்,
மற்றும் கோவை பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் அ.மு.ராசா, போத்தனூர் இர.கணேஷ், பொன்னாப்பூர் பு.திருநாவுக்கரசு, நீலகிரியார், செல்வக்குமார், விமல், இருதயராஜ், வசந்த், ஆவின் சுப்பையா, இரா.வெற்றிசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார் நிறைவாக கழக பொதுக்குழு உறுப்பினர் ச.திலகமணி நன்றியுரை யாற்றினார்
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட துணைத் தலைவர் பழ அன்பரசு,போத்தனூர் பகுதி கழக செயலாளர் இரா.கணேசன் சரவணம்பட்டி பகுதி தலைவர் அ.உத்ராபதி, செயலாளர் வசந்த்
தீர்மானங்கள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தோழர் இரா.நல்லகண்ணு மறைவிற்கு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தோழர்கள் ஒன்றிணைந்து பணியாற்றி நிதி திரட்டி மார்ச் 10ஆம் தேதி கோவை பீளமேட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது
மார்ச் 10 அன்னை மணியம் மையார் 106ஆவது பிறந்தநாள் விழா,பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கும் விழா,
“2026 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும்” என்னும் தலைப்பில் கழகப் பொதுக்கூட்டத்தை கோவையில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களுக்கு கோவை மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டு, பொது கூட்டத்தை கோவை பீளமேடு ரொட்டிக் கடை மைதானத்தில் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது
மார்ச் 10இல் கோவை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
