வத்தலக்குண்டில் 8ஆம் தேதி கழக பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுகிறார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வத்தலகுண்டு, மார்ச் 3- உலக மகளிர் நாளான 8.3.2026அன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தமிழர் தலைவர் “2026 சட்டப்பேரவைத் தேர்தலும்-நமது கடமையும் “என்ற தலைப்பில் சிறப்புரையாற்றும் கழகப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்து வதென்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் 26.2.2026அன்று காலை 11 மணிக்கு வத்தலக்குண்டில் மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வத்தலக்குண்டு நகருக்கு தேதியளித்தமைக்கு இரா.வீரபாண்டியன் நன்றி தெரிவித்துக்கொண்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரை உலகமயமாக்க ஆசிரியர் அவர்கள் ஆற்றிவரும் தொண்டிற்கு தோழர்கள் துணைநிற்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கூட்டத்தினை எந்தெந்த வகையில் எழுச்சியோடு நடத்த வேண்டும் என்பதனையும், அதற்கான வழிமுறைகளையும் விளக்கி உரையாற்றினார்.

மாவட்ட துணைச்செயலாளர் இரா.செயப்பிரகாசு, தி.தொ.க. பேரவை செயலாளர் மு.நாகராசன், திண்டுக்கல் மாநகரசெயலாளர் தி.க.செல்வம், கோ.இராஜ்குமார், வத்தலகுண்டு ஒன்றிய அமைப்பாளர் ஆட்டோ க.சுந்தர், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் பழ.நாக ராசன், ம.முத்துக்குமார், மு.உத்திர பாண்டியன் ஆகியோர் செயலாக்கவுரை வழங்கினர்.

இக்கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியின் சகோதரர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.செயராமனின் மாப்பிள்ளை வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் கி.சக்திவேலுக்கு 60-ஆவது பிறந்தநாளுக்கு பயனாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டியன் அவர்கள் புத்த கங்களை பரிசளித்து வாழ்த்தி மகிழ்ந்தார்.

தீர்மானங்கள்

பொதுவுடமைப்போராளி தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது என்றும்,

உலகமகளிர்நாளான 8.3.2026 அன்று மாலை வத்தலக்குண்டில் தமிழர் தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றும் பொதுக் கூட்டத்தை “2026-தமிழ்நாடுசட்டமன்றத்தேர்தலும்-நமது கடமையும்” என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக நடத்துவது எனவும்

உலக மகளிர் நாளினை முன்னிட்டு “பெண் ஏன் அடிமையானாள்?’,’ “பெண் களுக்கு தந்தை பெரியார் செய்தது என்ன?”, “அறிஞர் அண்ணாவின் உயில் கடைசி கடிதம்” ஆகிய மூன்று புத்தகங் களை ஆயிரக்கணக்கில் பரப்பு வது எனவும்,

வத்தலக்குண்டு வருகைதரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது எனவும்,

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்த நாளான 10.3.2026 அன்றும் நினைவு நாளான 16.3.2026 அன்றும் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக மாவட்ட இளை ஞரணி செயலாளர் இரா.சக்தி.சரவணன் நன்றி கூறினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *