உளுந்தூர்பேட்டை, மார்ச் 3- திராவிடர் கழக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து வயது 96 கடந்த 26.2.2026 அன்று காலை 7 மணி அளவில் முதுமையின் காரணமாக மறைவுற்றார்.
அவருடைய கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவருடைய உடல் விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கொடையாக வழங்கப்பட்டது. அவரின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலை மையில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அரங்க பன்னீர்செல்வம், சங்கராபுரம் சுப்பராயன், சேந்தநாடு பரணிதரன், விழுப்புரம் ராஜேந்திரன், கல்லக்குறிச்சி சுந்தர்ராஜன், சிதம்பரம் செல்வரத்தினம், உளுந்தூர்பேட்டைசெல்வ சக்திவேல், மருத்துவர் அன்புமணி, ஆண்டிப் பாளையம் ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை முத்து, ஆயி குப்பம் வள்ளல் குமார், விருத்தாசலம் இளந்திரையன், விருத்தாசலம் சிலம்பரசன், களத்தூர் பகவந்தாஸ், வடலூர் வசந்த் மற் றும் கல்லக்குறிச்சி வேல் முருகன் மற்றும் தோழர்கள் மாலையிட்டு கருப்பு ஆடை போர்த்தி வீர வணக்கம் செலுத்தினர்.
