புதுடில்லி, மார்ச் 3- இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் பிப்ரவரி 2026இல் ரூ.1.83 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத் துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 8.1 சதவீதம் அதிகமாகும்.
மகாராட்டிரா வழக்கம் போல ரூ.10,286 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு, கருநாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களும் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
