பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, மார்ச் 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான் காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர் களுக்கு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் 27.02.2026 அன்று உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார்.

Eazy Link Consultancy அமைப்பின் பன்னாட்டு மேம்படுத்துதல் பிரிவின் முதுநிலை மேலாளர் முரளி ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு பிரிவின் தலைமை செயலர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வெளி நாடுகளில் மருந்தியல் துறையிலுள்ள பல்வேறு மேற்படிப்புக்கள் குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் உரையாற்றி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்க மளித்தனர்.

துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்த இந்நிகழ்விற்கு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச.ராஜேஷ் நன்றி கூறினார்.

நான்காமாண்டு பயிலும் இளநிலை மருந்தியல் மாணவர் களுக்கு மேற்படிப்பு குறித்த இவ்வழிகாட்டுதல் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *