சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழா 27.02.2026 அன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மருந்தியல் தேர்வில் மருந்தியல் பயிற்சித் துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவி க.கனிஷ்டாவுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி முன்னிலையில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.
பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்று பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தனர்.
