சிறிநகர், மார்ச்.2 ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று (1.3.2026) ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சிறீநகரில் உள்ள அய்க்கிய நாடுகளின் ராணுவப் பார்வை யாளர்கள் குழுவின் தலைமையகம் முன் கருப்பு கொடி ஏந்தியபடி திரண்ட மக்கள், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக முழக் கங்களை எழுப்பினர். இதுபோல பண்டிபோரா பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது
இதனிடையே வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறீநகரில் கைப்பேசி இணைய சேவை துண்டிக்கப் பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அமைதி காக்குமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வரு மான மெகபூபா முப்தி வெளியிட்ட அறிக்கையில், “காமேனியைக் கொன்றது குறித்து இஸ்ரேலும், அமெரிக்காவும் தற்பெருமை பேசுகின்றன. மனசாட்சியை விட வசதியையும் சுயநலத்தையும் தேர்ந்தெடுத்த முஸ்லிம் நாடு களின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவு மிகவும் அவமானகரமானது” என கூறி யுள்ளார்.
