பி.ஜே.பி. ஆட்சியின் பொருளாதாரம்? பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, மார்ச் 1– நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.14 சதவீதம், 1.10 சதவீதம் சரிந்து முடிவடைந்தன.

துறை வாரியாக, அதிகபட்சமாக நிஃப்டி ரியல் எஸ்டேட் மற்றும் நிதி சேவைகள் குறியீடுகள் முறையே 2.3 சதவீதம் மற்றும் 2.1 சதவீதம் சரிந்து முடிவடைந்தன. வர்த்தக நேர இறுதியில் நிஃப்டி மீடியா, அய்டி, நுகர்வோர் பொருள்கள் குறியீடுகள் மட்டும் லாபத்தைச் சந்தித்தன. மற்ற அனைத்துத் துறைகளும் நட்டத்துடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

அய்சிஅய்சிஅய் வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்கள்.

சென்செக்ஸ் 30 பங்குகளில் டிரென்ட், ஹெச்சிஎல், இன்போசிஸ், எட்டர்னல் ஆகிய 4 நிறுவனங்கள் மட்டுமே லாபமடைந்துள்ளன.

இன்றைய சரிவு வர்த்தகத்தால் ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07 சதவீதம் குறைந்து 90.97 ஆக உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் குறிப்பாக அமெரிக்கா – ஈரான் இடையேயான அணு ஒப்பந்த பேச்சுவார்த்தையால் பங்குச்சந்தைகள் 27.2.2026 அன்றும் கடும் சரிவைச் சந்தித்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

குரூப் 2 மற்றும் 2ஏ
முதன்மை தேர்வு

கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!

சென்னை, மார்ச் 1– குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு வரும் மார்ச் 5ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ரூ. 200 தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கூடுதல் அவகாசம் என்பதால், கடைசி நேரத் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க முன்கூட்டியே பணிகளை முடிப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *