மத்திய கிழக்கு முழுவதும் பரவிய போர்.. கத்தார், குவைத், யூஏஇ, ஜோர்டான், பஹ்ரைனில் தாக்குதல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 1 அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.

இதற்கிடையே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். மேலும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த சூழலில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளித் தாக்குதலை நடத்தி வருகிறது. நகரில் பல பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டுவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை இலக்காகக் கொண்டும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அங்கு இருந்தாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. ஈரானில் இணைய சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

உங்கள் அரசாங்கத்தை கைப்பற் றுங்கள், இது உங்களுக்கான நேரம் என்று ஈரான் மக்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள் ளார்.

இதற்கிடையே பதிலடி தாக்குதலாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி உள்ளது. இதனால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் ஈரான் எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜோர்டான், அய்க்கிய அரபு அமீரகம் (UAE) தலைநகர் அபுதாபி, குவைத் மற்றும் கத்தாரின் தோஹா விலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்தி நிறுவனம்  ஏஎப்பி (AFP) தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5ஆவது படைப்பிரிவுத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மய்யத்திலும், கத்தாரிலும் பெரிய அளவிலான வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஈராக் மற்றும் அய்க்கிய அரபு அமீரகம் தங்களது வான்வெளியை மூடியுள்ளன. ஜோர்டானில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஏர் இந்தியா உள்ளிட்ட பல பன் னாட்டு விமான நிறுவனங்கள் மேற்கு ஆசியாவிற்கான தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.

ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அங்குள்ள இந்தியர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தி யுள்ளது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *