பா.ஜ.க.விடம் சரண்டர்? மதுரையில் ‘பெரியார்’ படம் அகற்றம் அ.தி.மு.க.வின் செயலுக்குக் கிளம்பும் கண்டனங்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, மார்ச் 1 மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், கூட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் ஒளிப்படம் திடீரென அகற்றப்பட்டது – பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டத்திற்காக, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் ஒளிப்படங்கள் அடங்கிய வரவேற்பு வளைவுகள் மற்றும் தட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த முகப்பில் தந்தை பெரியாரின் ஒளிப்படமும் இடம் பெற்றிருந்தது.

இருப்பினும், பாஜக தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே அந்தப் ஒளிப்படம் அகற்றப்பட்டு விட்டது! ” பாஜகவின் உத்தரவுக்குப் பணிந்து, திராவிட இயக்கத்தின் ஆணிவேரான தந்தை பெரியாரின் படத்தை அதிமுக அகற்றியுள்ளது” என அரசியல் விமர் சகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர்  கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

‘‘அதிமுகவின் இந்தச் செயல், அவர்கள் பாஜகவிடம் முழுமையாகச் சரணடைந்து விட்டதையே காட்டுகிறது,” என அதிமுக அனுதாபிகளே சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *