மதுரை, மார்ச் 1 மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், கூட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் ஒளிப்படம் திடீரென அகற்றப்பட்டது – பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டத்திற்காக, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் ஒளிப்படங்கள் அடங்கிய வரவேற்பு வளைவுகள் மற்றும் தட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த முகப்பில் தந்தை பெரியாரின் ஒளிப்படமும் இடம் பெற்றிருந்தது.
இருப்பினும், பாஜக தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே அந்தப் ஒளிப்படம் அகற்றப்பட்டு விட்டது! ” பாஜகவின் உத்தரவுக்குப் பணிந்து, திராவிட இயக்கத்தின் ஆணிவேரான தந்தை பெரியாரின் படத்தை அதிமுக அகற்றியுள்ளது” என அரசியல் விமர் சகர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
‘‘அதிமுகவின் இந்தச் செயல், அவர்கள் பாஜகவிடம் முழுமையாகச் சரணடைந்து விட்டதையே காட்டுகிறது,” என அதிமுக அனுதாபிகளே சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
