இது என்ன ஜாதி ஆணவம்? என்சிஇஆர்டி எட்டாம் வகுப்பு புத்தகத்தில் குடிசை வாழ் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாம்! முன்னாள் பேராசிரியர் வழக்கு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.28 என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், அண்மை தீர்ப்புகள் குடிசைவாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் என்சிஆர்டியின் முன்னாள் பேராசிரியர் பங்கஜ் புஷ்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து விவரிக்கப்பட்டதால், என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் அதே பாடப்புத்தகத்தில், நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் குடிசைவாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது என என்சிஆர்டியின் முன்னாள் பேராசிரியர் பங்கஜ் புஷ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது மாணவர்களுக்கு நீதித்துறை குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தும். இப்புத்தகத்தை மறுஆய்வு செய்து உரிய திருத்தம் செய்யவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பங்கஜ் புஷ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *