கொல்கத்தா, பிப்.28 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்காகத் தேர்தல் நுண் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் திரிணமுல் காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா வெளியிட்ட பதி வில் கூறியிருப்பதாவது: “உங்கள் தேர்தல் பார்வையாளர் சி.எஸ். முருகன் அய்ஏஎஸ் அதி காரியைச் சற்றுக்கட்டுப்படுத்தி வைத்திருங்கள். தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு அவர் பல்வேறு ரகசிய வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.” மேலும், அந்தப் பதிவில் ‘குயிக் கன் முருகன்’ தெலுங்குத் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தின் ஒளிப் படத்தையும் அவர் இணைத் திருந்தார்.
இதற்குப் பதிலடி தரும் விதமாக 26.2.2026 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் சி.எஸ். முருகன் கூறியபோது:”அந்தப் படத்தில் காட்டியுள்ளது போல என்னிடம் அதிக அளவு துப்பாக்கிகள் இல்லை. இருப்பினும், தமிழ் நாடு காவல்துறையில் நான் இரண்டாண்டுகள் பயிற்சி பெற்றபோது, பல்வேறு வகையான துப்பாக்கிகளைக் கையாளவும், சட்டப்பூர்வமாகவும் திறம்படவும் அவற்றைப் பயன்படுத்த எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, ரகசிய வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முருகன் உத்தரவிட்டு வருகிறார் என்று திரிணமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியும் 26.2.2026 அன்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வாக்காளர்களின் பெயர் களை நீக்குவதற்காகவே நுண் பார்வையாளர்களைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பயன் படுத்துகின்றனர் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
