போராட்டம் நடத்தினால் கைது செய்ய இது ஒன்றும் வட கொரியா அல்ல! பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.28 டில்லியில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உச்சி மாநாட்டில், இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த நிர்வாகிகள் திடீரென ஆடையைக் கழற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட் டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

கைது

மாநாட்டின் 5ஆவது அரங்கில் திடீரென நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் நிழற்படங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர். அந்த டி-ஷர்ட் களில் இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சர்ச்சைக்குரிய ‘எப்ஸ்டீன் பைல்’ (Epstein Files) உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த டி-ஷர்ட்களைக் கழற்றிய அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும், வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இந்தச் செயலால் மாநாட்டு அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காங் கிரஸ் நிர்வாகிகளான கிருஷ்ணா ஹரி, குந்தன், அஜய் குமார், நரசிம்ம, ஜிதேந்திர   ஆகியோரை டில்லி காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

“இது வடகொரியா அல்ல” – ராகுல் காந்தி பதிலடி

கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“இந்தியா ஒரு ஜனநாயக நாடு, வடகொரியா அல்ல. இங்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதே தேசத்துரோகமாகக் கருதப்படும் சூழல் உருவாகி வருகிறது. கேள்வி கேட்பதே ஒரு சதி எனச் சித்தரிக்கப்படுவது கவலையளிக்கிறது,” எனத் தெரி வித்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *